TNPSC Thervupettagam

​​QUAD கூட்டம் 2019

November 16 , 2019 2091 days 842 0
  • நான்கு (இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாங்காக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக சந்தித்துப் பேசினர்.
  • பயங்கரவாத எதிர்ப்பு, வழிகாட்டுதல், பேரிடர் நிவாரண உதவி, வான் வெளிப் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, மேம்பாடு, நிதி மற்றும் இணையப் பாதுகாப்பு முயற்சிகள் போன்றவற்றுக்கான ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக இந்த அமைப்பின் அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.

QUAD

  • நான்கு நாடுகளின் பாதுகாப்பு உரையாடல் அமைப்பு அல்லது குவாடு அமைப்பானது முதன்முதலில் 2007 ஆம் ஆண்டில் ஜப்பானியப் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டது.
  • 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள "குவாடு" கூட்டிணைவிற்கு ஒரு புதிய வடிவம் கொடுத்தன.
  • இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள முக்கியமான கடல் பாதைகளை எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் அல்லாமல் (குறிப்பாக சீனா) வைத்திருக்க ஒரு புதிய உத்தியை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆஸ்திரேலியாவைத் தவிர்த்து குவாடு உறுப்பு நாடுகள் தற்போது வருடாந்திர மலபார் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 1994 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தொடங்கிய இந்தப் பயிற்சியானது 2015 ஆம் ஆண்டில் முத்தரப்பு (ஜப்பானுடன்) இராணுவப் பயிற்சியாக உருவெடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்