தமிழ்நாடு (18,925), மத்தியப் பிரதேசம் (14,965) மற்றும் மேற்கு வங்காளம் (13,500) ஆகியவை தற்கொலைப் பதிவுப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குகள் அதிகமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு அதிக அளவில் வகுப்புவாதக் கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2020 ஆம் ஆண்டில் 56.5 சதவீதமாக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதமானது (1 லட்சம் மக்கள் தொகையில் நடக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை) 2021 ஆம் ஆண்டில் 64.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில், 31.8 சதவீத வழக்குகள் 'கணவன் அல்லது அவரது உறவினர்களால் மேற்கொள்ளப்படும் கொடுமை' என்ற பிரிவின் கீழும், 20.8 சதவீத வழக்குகள் 'பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை' என்ற வகையின் கீழும், கடத்தல் வழக்குகள் 17.6 சதவீதம் என்றும், மற்றும் 7.4 சதவீதம் கற்பழிப்பு வழக்குகள் என்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகும்.
2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் உண்மையான ஒரு எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப் பிரதேசம் (56,083) இந்த அறிக்கையில் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (40,738) மற்றும் மகாராஷ்டிரா (39,526) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் நாகாலாந்து மாநிலம் ஒரு தனித்த இடத்தினைப் பெற்றுள்ளது.
டெல்லி நகரானது மிகவும் பாதுகாப்பற்ற ஒரு பெருநகரமாகும்.
அதைத் தொடர்ந்து மும்பை (12.76 சதவீதம்) மற்றும் பெங்களூரு (7.2 சதவீதம்) ஆகிய நகரங்கள் உள்ளன.
ராஜஸ்தானில் அதிகக் கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன
2021 ஆம் ஆண்டில், குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் 507 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இவ்வகையில் குறைவான வழக்குப் பதிவு மேற்கொள்ளப் பட்டுள்ளதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
தேசியக்குற்றஆவணக்காப்பகம்
தேசியக் குற்ற ஆவணக் காப்பகமானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகமானது, குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகள் மற்றும் மத்தியக் கைரேகை ஆய்வு வாரியம் ஆகியவற்றினை இயக்குகிறது.
இதனால் வெளியிடப்படும் அறிக்கைகளாவன; இந்தியாவில் குற்றங்கள், இந்தியாவில் சிறைச்சாலைப் புள்ளிவிவரங்கள், இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் ஆகியனவாகும்.