கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இந்த மாநாடானது நடைபெற்றது.
தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் தலைமையின் கீழ் கர்நாடகாவின் ராய்ச்சூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தால் இந்த மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டின் கருத்துரு, " திணை உற்பத்தியில் பல ஈர்ப்புப் பகுதிகளை உருவாக்குதல் - திணை உற்பத்தியில் பல தொழில்முனைவோரை உருவாக்குதல்" என்பதாகும்.
இது 2023 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட உள்ள சர்வதேச திணை ஆண்டிற்கான ஒரு தொடக்க விழா போன்றதாகும்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் சர்வதேச திணைக் கண்காட்சி நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்தார்.
திணை ஏற்றுமதியில் உலக அளவில் 5வது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.