இந்திய ராணுவம் குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதம் ஏந்தியப் படைகள் மற்றும் உயர்தர பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டிருப்பதால் இந்தியா உலகளவில் ஒரு உயர்தரக் குழுவில் இணைகிறது.
சிறந்தப் பாதுகாப்பு அமைப்பிற்கான புத்தாக்கம் (iDEX), பாதுகாப்புப் புத்தாக்க அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், பெங்களூரைச் சேர்ந்த ஆழ்ந்தத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனமான QNu Labs, குவாண்டம் விசை வழங்கீடு (QKD) மூலம் மேம்படுத்தப் பட்ட பாதுகாப்புத் தொடர்பு அமைப்பினை உருவாக்கியுள்ளது.
QKD அமைப்புகளில் முன்னணியில் உள்ள நாடுகள் சீனா, அமெரிக்கா, கனடா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் ஆகியனவாகும்.
இது பல குவாண்டம் இயந்திரக் கூறுகளை உள்ளடக்கிய மறை குறியீட்டியல் என்ற ஒரு நெறிமுறையைப் பயன்படுத்தி பாதுகாப்பான தகவல்தொடர்புகளை மேற்கொள்ளச் செய்வதாகும்.
ஒரு QKD அமைப்பானது, நிலப்பரப்பு ஒளியிழை உள்கட்டமைப்பில் ஒரு குறிப்பிட்ட தூரத்தால் பிரிக்கப்பட்ட இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஒரு குவாண்டம் பாதுகாப்பு மிக்க இரகசிய இணை சமச்சீர் விசைகளை உருவாக்க வழி வகை செய்கிறது.
முக்கியமான தரவைக் குறியாக்கப் பயன்படும் முடக்க முடியாத மறை குறியாக்க விசைகளை உருவாக்கச் செய்வதற்கு முடக்க முடியாத குவாண்டம் அமைப்பினை உருவாக்க QKD உதவுகிறது.