டெல்லி அரசானது மெய்நிகர்ப் பள்ளியைத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்வதற்குத் தகுதி பெறுவர் என்று அது அறிவித்தது.
இது இந்தியாவின் முதல் மெய்நிகர்ப் பள்ளி என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் (NIOS) ஆனது நாட்டின் முதல் மெய்நிகர்ப் பள்ளியானது கடந்த ஆண்டு மத்திய அரசினால் தொடங்கப்பட்டது என்றும் அது டெல்லி அரசால் அல்ல என்றும் கூறியுள்ளது.