நிதி ஆயோக் "பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துதல் - இந்தியாவில் ஆழ்ந்த கார்பன் நீக்கச் செயல்முறைக்கான வாய்ப்புகள்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையானது டெல்லியைச் சேர்ந்த ஆலோசனை வழங்கீட்டுக் குழுவான RMI இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மீதான சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் சுங்க வரிகளைக் குறைக்க அல்லது அவற்றிற்கு விலக்கு அளிப்பதற்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
பசுமை ஹைட்ரஜன் என்பது நீரியல் மின்னாற்பகுப்பு மூலம் உற்பத்தி செய்யப் படுகின்ற ஹைட்ரஜன் வாயு ஆகும்.
மின்னாற்பகுப்பு என்பது தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கும் ஆற்றல் மிகுந்த ஒரு செயல்முறையாகும்.
2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹைட்ரஜன் தேவை நான்கு மடங்கு அதிகரிக்கும் என்றும் இது உலகளாவிய ஹைட்ரஜன் தேவையில் 10% என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.
இந்தக் கொள்கையானது 2030 ஆம் ஆண்டிற்குள் பசுமை ஹைட்ரஜனின் உள்நாட்டு உற்பத்தியை 5 மில்லியன் டன்களாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.