சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது 2022 ஆம் ஆண்டு வன (வளங்காப்பு) விதிகளை வெளியிட்டுள்ளது.
இது 1980 ஆம் ஆண்டு வன (வளங்காப்பு) சட்டத்தின் 4வது பிரிவினால் வழங்கப் படுகிறது.
மேலும், இது 2003 ஆம் ஆண்டு வன (வளங்காப்பு) விதிகளுக்கான பதிலீட்டு விதிகள் ஆகும்.
விதிமுறைகள்
மாநிலம்/ஒன்றியப் பிரதேசத்தில் ஒரு ஆலோசனைக் குழு, ஒரு பிராந்திய அளவில் அதிகாரமளிக்கப் பட்ட குழு மற்றும் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தல்.
இது 40 ஹெக்டேர் வரையிலான நிலம் மற்றும் 0.7 வரையிலான மேல்பரப்பு கிளை அடர்த்தி கொண்ட வன நிலங்களைப் பயன்படுத்தும் அனைத்து முற்போக்குத் திட்டங்களையும் (எடுத்துக்காட்டாக சாலைகள், நெடுஞ்சாலைகள் போன்றவை) ஆய்வு செய்யும்.
ஒவ்வொரு திட்டத்தையும் விரைவாக மதிப்பாய்வுச் செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும்.
வனவாசிகளின் வன உரிமைகள் சார்பானப் பிரச்சனைகளை (வன உரிமைச் சட்டம், 2006) தீர்த்து வைப்பதற்கும், வன நிலங்களின் பல்பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கச் செய்வதற்கும் வேண்டி மாநிலங்களுக்கு இதில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பெரியப் பரப்பளவை உள்ளடக்கிய சில திட்டங்களுக்கு வேண்டி, அந்தக் குழுவிற்கு 100 ஹெக்டேருக்கு மேல் உள்ள சுரங்கப் பணி சாராதத் திட்டங்களுக்கு 120 நாட்களும், சுரங்கத் திட்டங்களுக்கு 150 நாட்களும் வழங்கப்படும் என்ற அளவில் இன்னும் சில கால அவகாசங்கள் வழங்கப்படும்.