மெட்டா நிறுவனமானது (முன்னதாக பேஸ்புக்) பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் 'Going Online as Leaders - GOAL' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியது.
GOAL என்பது ஒரு எண்ணிமக் கல்வியறிவு மற்றும் வழிகாட்டல் முன்னெடுப்பாகும்.
இது எண்ணிம அதிகாரமளித்தல் அறக்கட்டளையுடன் (இந்தியா) உடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட ஒரு முன்னெடுப்பாகும்.
இது நாட்டின் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த 10 லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்களை எண்ணிம முறை அறிவில் மேம்படுத்துதல், இணைத்தல் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.