கவலை மற்றும் சுய தேடல் பற்றிய ‘My Experiments with Silence’ என்ற புத்தகம் சமீர் சோனி என்பவரினால் இயற்றப் பட்டது.
சோனியின் இந்தப் புத்தகம், டெல்லியில் அவரின் வாழ்நாளில் அவருடனான உள்ளார்ந்த உரையாடல்கள், வால் ஸ்டீரிட்டில் அவர் மேற்கொண்ட சிறு வேலைகள் மற்றும் பாலிவுட்டில் அவர் செலவிட்ட காலங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது சொந்த குறிப்புகளைக் கொண்டதாக இருக்கும்.
இந்த புத்தகம் ஓம் புக் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்படும்.
உள்ளார்ந்தப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடிய (அ) போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இது சமர்ப்பணமாகும் என்று சோனி கூறுகிறார்.