“சுகமியா பாரத் அபியான்” என்று அழைக்கப் படும் “அணுகக் கூடிய இந்தியா” என்ற பிரச்சாரமானது (Accessible India Campaign - AIC) 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்டது.
இது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
இந்தத் திட்டமானது மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
AICயின் காலக்கெடுவானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.