TNPSC Thervupettagam

நிர்பயா நிதி – தற்போதைய நிலை

December 17 , 2019 1977 days 1256 0
  • அரசாங்கத் தரவுகளின் படி, 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நிர்பயா நிதியத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் 20% க்கும் குறைவான அளவு நிதியை மட்டுமே பயன்படுத்தியுள்ளன.
  • தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிர்பயா நிதியில் தமிழகம் 3% நிதியை மட்டுமே பயன்படுத்தி உள்ளது (ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 190.68 கோடி மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி ரூ. 6 கோடி).

வரிசை எண்

முதலில் உள்ள 5 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள்

கடைசி இடங்களில் உள்ள 5 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள்

1

சண்டிகர் (59.83%)

மணிப்பூர் (0%)

2

மிசோரம் (56.32%)

மகாராஷ்டிரா (0%)

3

உத்தரகண்ட் (51.68%)

லட்சத் தீவுகள் (0%)

4

ஆந்திரப் பிரதேசம் (43.23%)

மேற்கு வங்காளம் (0.76%)

5

நாகாலாந்து(38.17%).

தில்லி (0.84%)

நிர்பயா நிதி பற்றி

  • இந்த நிதியானது மத்திய நிதி அமைச்சகத்தினால் 2013 ஆம் ஆண்டில் 1000 கோடி ரூபாய் நிதித் தொகையுடன் உருவாக்கப் பட்டது.
  • இந்த நிதியானது நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஒரு காலாவதியாகாத  (non-lapsable) நிதியாகும்.
  • இது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த செயலாளரின் கீழ் உள்ள அதிகாரமளிப்பு அதிகாரிகள் குழுவினால் கண்காணிக்கப் பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்