“தனிப்பட்ட தீவிரவாதிகள்” என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது
September 6 , 2019 2160 days 611 0
தாவூத் இப்ராஹிம், மசூத் அசார், ஹபீஸ் சயீத் மற்றும் ஜாக்கி-உர்-ரஹ்மான்-லக்வி ஆகியோர் ஒரு புதிய தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் "தனிப்பட்ட தீவிரவாதிகள் " என்று அறிவிக்கப்பட்டனர்.
மத்திய அரசு சமீபத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம், 1967ல் திருத்தங்களைச் செய்து அவர்களைப் பயங்கரவாதிகள் என்று அறிவித்து, அவர்களின் பெயர்களை இச்சட்டத்தின் 4வது அட்டவணையில் சேர்த்துள்ளது.
இதற்கு முன்பு தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டால், அதனுடன் தொடர்புடைய நபர்கள் அந்த அமைப்புகளின் பெயர்களை மாற்றி தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்.