TNPSC Thervupettagam

1 கோடி பயனர்கள் - iGOT கர்மயோகி

May 26 , 2025 15 days 72 0
  • iGOT கர்மயோகியானது, 1 கோடி பதிவுகளைத் தாண்டியுள்ளதாக மத்தியப் பணியாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • பயனாளர் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்கள் பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியனவாகும்.
  • இது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெறும் 3 லட்சம் பயனாளர்களில் இருந்து உயர்ந்துள்ளது என்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 30 மடங்கு வளர்ச்சி ஆகும்.
  • iGOT கர்மயோகி என்பது கர்மயோகித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த அரசு இயங் கலை வழிப் பயிற்சியைக் குறிக்கிறது.
  • இது தேசிய குடிமைப் பணிகள் பயிற்சித் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (NPCSCB) கீழ் தொடங்கப் பட்டது.
  • இது திறம் மிக்க, தொழில்முறை மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள குடிமைப் பணிச் சேவையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்