அரசியலமைப்பின் 10வது அட்டவணையைத் திருத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மக்களவையில் ஒரு தனி நபர் உறுப்பினர் மசோதா அறிமுகப் படுத்தப் பட்டது.
இந்த மசோதாவானது, கடுமையான கட்சி கொறடா அமலாக்கத்தைக் குறைத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் மசோதாக்கள் மற்றும் முன்மொழிவுகளில் / பிரேரணைகளில் சுயாதீனமாக வாக்களிக்க அனுமதிக்க முயல்கிறது.
10வது அட்டவணை ஆனது 1985 ஆம் ஆண்டு 52வது திருத்தச் சட்டத்தினால் சேர்க்கப் பட்டது.
இது கொள்கையற்ற கட்சித் தாவல்களை தடுக்கவும் அரசியல் உறுதித்தன்மையை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொறடாக்கள் என்பது பாராளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் வாக்களிக்க அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் வழிமுறைகள் ஆகும், என்பதோடுகொறடாவினை மீறுவது 10வது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கத்திற்கு வழி வகுக்கும்.