TNPSC Thervupettagam

வரைவு இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதா, 2025

December 12 , 2025 7 days 73 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), இந்தியப் புள்ளியியல் கல்வி நிறுவன (ISI) மசோதா, 2025 வரைவை வெளியிட்டது.
  • இது ISI நிறுவனத்தினைப் பதிவு செய்யப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ISI ஆனது கொல்கத்தாவில் P.C. மஹாலனோபிஸ் அவர்களால் 1931 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது புள்ளிவிவரங்கள், கணிதம், பொருளாதாரம், கணினி அறிவியல் மற்றும் தொடர்பு உடைய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை கல்விப் படிப்புகளை வழங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும்.
  • இந்த மசோதா அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களைக் கொண்ட ஆளுநர் குழுவிற்கு அதிகாரத்தை வழங்கி, ஆசிரியர் மற்றும் கல்வித் துறை சார் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கிறது.
  • 29வது பிரிவானது மாணவர் கட்டணம், ஆலோசனை மற்றும் உதவித்தொகை சார்ந்த ஆராய்ச்சி மூலம் வருவாய் ஈட்ட அனுமதிக்கிறது என்ற நிலையில் இது அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதி குறித்த கவலைகளை எழுப்புகிறது.
  • முந்தைய ஆசிரியர் மற்றும் பணியாளர் பிரதிநிதித்துவ விதிமுறையை நீக்கி, ISI நிறுவனத்தில் உள்ள அனைத்து நியமனங்களும் தற்போது மத்திய அரசால் கட்டுப்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்