TNPSC Thervupettagam

விமானப் பணிகளுக்கான நேர வரம்பு விதிமுறைகள்

December 12 , 2025 7 days 43 0
  • விமானப் பணிகளுக்கான திருத்தப்பட்ட நேர வரம்பு (FDTL) விதிகள் வெளியிடப்பட்ட பிறகு, இண்டிகோ பெருமளவிலான விமான ரத்துகளை எதிர் கொண்டது என்ற நிலையில், இது பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தற்காலிக விலக்குகளை அமல் செய்ய தூண்டியது.
  • விமானிகளின் சோர்வைத் தடுக்க, பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகள் FDTL விதிமுறைகள் ஆகும்.
  • திருத்தப்பட்ட விதிகளில் வாரத்திற்கு 48 மணி நேர ஓய்வு, அதிகபட்சமாக 2 இரவுகள் தரையிறங்குதல் மற்றும் தொடர்ச்சியாக 2 இரவுகளுக்கு மேல் பணிகள் இருக்கக் கூடாது ஆகிய விதிகள் அடங்கும்.
  • பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள DGCA, விமானப் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துகிறது, விமானிகளுக்கு உரிமம் வழங்குகிறது மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது.
  • பயணிகள் போக்குவரத்து மற்றும் விமான நிலையங்களின் விரைவான வளர்ச்சியுடன், 7.7 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ஆதரிக்கும் 3வது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக இந்தியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்