10 ஆண்டு கால கிராமப்புற துப்புரவு உத்தி (2019-2029)
September 29 , 2019 2137 days 1541 0
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையானது 10 ஆண்டு கால கிராமப்புற துப்புரவு உத்தியை (2019-2029) தொடங்கியுள்ளது.
இந்த உத்தியானது தூய்மை இந்தியா திட்டம் – கிராமப் புறம் என்பதின் கீழ் அடையப்பட்ட துப்புரவு குறித்த நடத்தை மாற்றத்தை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்துகின்றது.
திறந்தவெளிக் கழிப்பிடமற்றது – பிளஸ்
திறந்தவெளிக் கழிப்பிடமற்றது – பிளஸ் (Open Defecation Free - ODF) என்பதற்கான திட்டமிடலில் உள்ளூர் அரசாங்கங்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், அதனைச் செயல்படுத்துபவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு வழிகாட்டும் வகையிலான கட்டமைப்பை இந்த 10 ஆண்டு உத்தி வகுக்கின்றது.
ODF பிளஸ் ஆனது அனைவருக்குமான கழிப்பறையின் பயன்பாடு மற்றும் ஒவ்வொரு கிராமத்திற்கும் திட & திரவக் கழிவு மேலாண்மைக்கான அணுகல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.