2020 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் திரிபுரா மாநிலத்தில் 10வது தேசிய அறிவியல் திரைப்படத் திருவிழா (National Science Film Festival of India - NSFFI) நடத்தப்பட விருக்கின்றது.
அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், ஆற்றல், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இத்திரைப்படத் திருவிழா நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் இவற்றை எளிமையான முறையில் விரிவாக்கம் செய்வதன் மூலம் பொது மக்களுக்கு அறிவியலை நெருக்கமாக இது கொண்டுச் செல்லவிருக்கின்றது.
திரைப்படத் திருவிழாவைத் தவிர, திரிபுராவில் தற்பொழுது பதவியில் உள்ள மாநில அரசு, ஒரு சிறப்புப் போட்டித் திறன்மிக்க திரைப்படத் தயாரிப்பு முன்னெடுப்பான ”சேருமிடம் திரிபுரா” (Destination Tripura) என்பதனையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலத்தில் இரண்டாவது முறையாக இத்திருவிழா நடத்தப்படவிருக்கின்றது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2011 ஆம் ஆண்டில் NSFFI சென்னையில் நடத்தப்பட்டது.