2017-18 ஆம் நிதியாண்டிற்கான நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO - National Sample Survey Office) வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி 2017-18 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவிகிதமாக இருக்கின்றது. மேலும் நாட்டில் கடந்த 45 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிக அளவில் காணப்படுகின்றது.
இந்தியா முழுவதிலும் ஆண்களிடையேக் காணப்படும் வேலையின்மை விகிதம் 6.2 சதவிகிதமாகவும் பெண்களிடையேக் காணப்படும் வேலையின்மை விகிதம் 5.7 சதவிகிதமாகவும் உள்ளது.
மேலும் இந்த அறிக்கை ஆண்களிடையே காணப்படும் வேலையின்மை விகிதம் கிராமப்புறப் பகுதிகளுடன் (வேலையின்மை விகிதம் - 5.8%) ஒப்பிடும் போது நகர்ப்புறங்களில் (7.1%) அதிகமாகக் காணப்படுவதைக் காட்டுகின்றது.
இதே போன்று பெண்களிடையேக் காணப்படும் வேலையின்மை விகிதம் கிராமப்புறப் பகுதிகளுடன் (வேலையின்மை விகிதம் - 3.8%) ஒப்பிடும் போது நகர்ப் புறங்களில் (வேலையின்மை விகிதம் - 10.8) அதிகமாகக் காணப்படுகின்றது.