100 பில்லியன் டாலர் அளவினை எட்டிய இந்தியாவின் வருடாந்திர பண வரவு
April 27 , 2023 750 days 373 0
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் வருடாந்திர பண வரவானது 100 பில்லியன் டாலர்கள் அளவினைக் கடந்த, உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் பணம் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களால் அனுப்பப்படும் பண வரவானது 2022 ஆம் ஆண்டில், ஆண்டிற்கு 12% என்ற வளர்ச்சியுடன் ஒரு உய்ய நிலையைக் கடந்தது.
2021 ஆம் நிதியாண்டில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா, 2023 ஆம் நிதி ஆண்டிலும் பண வரவினை அதிகம் பெறும் நாடு என்ற அந்தஸ்தினைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப் படும் பண மதிப்பானது ஆண்டிற்கு 5% அதிகரிப்புடன், 2022 ஆம் ஆண்டில் 630 பில்லியன் டாலர்களை எட்டியது.