100 மிகவும் சக்தி வாய்ந்த பெண்களின் போர்ப்ஸ் 2020 பட்டியல்
December 21 , 2020 1788 days 937 0
இந்தப் பட்டியலில் தொடர்ந்து 10வது ஆண்டாக ஜெர்மனி நாட்டின் ஆட்சியாளரான ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டுப் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவரான கமலா ஹாரிஸ் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பயோகான் நிறுவனரான கிரண் மசூம்தார் ஷா, எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரோஷிணி நாடார் மல்கோத்ரா, லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான ரேணுகா ஜக்தியானி ஆகியோர் போர்ப்ஸ் பத்திரிக்கையினால் உலகின் 10 சக்தி வாய்ந்த பெண்களாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் நிர்மலா சீதாராமன் 41வது இடத்திலும் நாடார் மல்கோத்ரா 55வது இடத்திலும் மசூம்தார் ஷா 68வது இடத்திலும் ரேணுகா ஜக்தியானி 98வது இடத்திலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முதலாவது முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார்.