இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் (DRDO - Defence Research and Development Organisation) தில்லியில் அமைக்கப் பட்ட 1000 படுக்கை வசதி கொண்ட ஒரு தற்காலிக அமைப்பாகும்.
இது மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், டாடா குழுமம் மற்றும் ஆயுதப் படைகள் ஆகியவற்றுடன் இணைந்து DRDOவினால் 12 நாட்களில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
இந்த மையமானது சர்தார் வல்லபாய் படேல் கோவிட் – 19 மருத்துவமனையில் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் உள்ள அறைகளானது 2020 ஆம் ஆண்டு ஜுன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக, அவர்களது பெயர் கொண்டு சூட்டப் பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செயற்கை சுவாச உபகரணம் கொண்ட அறை ஆகியவை இந்திய ஆயுதப் படைகளின் கட்டளைப் பிரிவுத் தளபதியான பிக்குமல்லா சந்தோஷ் பாபு என்பவரது நினைவாக அவரது பெயர் கொண்டு சூட்டப் பட்டுள்ளது.