இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவற்படை மற்றும் மொரீஷியஸ் கடலோரக் காவற்படை ஆகியவற்றிற்கு 100 போர்க் கப்பல்களைக் கட்டமைத்து வழங்கிய இந்தியாவின் முதலாவது கப்பல் கட்டும் தளமாக கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளர்கள் என்ற நிறுவனம் உருவெடுத்துள்ளது.
100-வது போர்க் கப்பலான IN LCU - 56 ஆனது 216 நபர்களுக்கு இடவசதி அளிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் இதில் 2 உள்நாட்டு CRN 91 துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.