TNPSC Thervupettagam

103 அம்ரித் பாரத் இரயில் நிலையங்கள்

May 26 , 2025 15 days 103 0
  • 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள சுமார் 86 மாவட்டங்களில் புதுப்பிக்கப் பட்ட/ மறுமேம்படுத்தப்பட்ட 103 இரயில் நிலையங்கள் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் இரயில் நிலையத் திட்டம் ஆனது, இரயில் நிலையங்களை நன்கு மேம்படுத்துவதற்கும் அவற்றை "நகர மையங்களாக" மேம்படுத்துவதற்குமான ஒரு நீண்டகாலத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் மறுமேம்பாடு செய்யப் படுவதற்காக வேண்டி மொத்தம் 1,300 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இவற்றில் 157 நிலையங்கள் உத்தரப் பிரதேசத்திலும், 132 நிலையங்கள் மகாராஷ்டிர மாநிலத்திலும், 101 நிலையங்கள் மேற்கு வங்காளத்திலும் உள்ளன.
  • அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் ஒன்பது தமிழ்நாடு இரயில் நிலையங்கள் புதுப்பிக்கப் பட்டுள்ளன.
  • அவற்றில்,
    • சென்னை கோட்டத்தில் உள்ள பரங்கிமலை/செயிண்ட் தாமஸ் மவுண்ட் இரயில் நிலையம்
    • சேலம் கோட்டத்தில் உள்ள சாமல்பட்டி நிலையம்
    • திருச்சி கோட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் நிலையம்
    • போளூர்
    • சிதம்பரம்
    • விருத்தாசலம்
    • மன்னார்குடி
    • கன்னியாகுமரியில் உள்ள குளித்துறை நிலையம்
  • ஸ்ரீரங்கம் நிலையத்தின் வடிவமைப்பானது இரங்கநாத சுவாமி கோயிலின் வடிவிலும், திருவண்ணாமலை நிலையம் திராவிடக் கட்டிடக்கலை வடிவிலும் அமைக்கப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்