TNPSC Thervupettagam

107வது இந்திய அறிவியல் மாநாடு

January 5 , 2020 2051 days 930 0
  • பிரதமர் நரேந்திர மோடி 107வது இந்திய அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தில் நடத்தப் பட திட்டமிடப் பட்டிருக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டுக்கான இந்த மாநாட்டின் கருப்பொருள் “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: ஊரக வளர்ச்சி” என்பதாகும்.
  • முதன்முறையாக, இந்திய அறிவியல் மாநாட்டின் ஒரு பகுதியாக விவசாயிகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட உள்ளது.

இந்திய அறிவியல் மாநாடு

  • இந்திய அறிவியல் மாநாடானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் இந்திய அறிவியல் மாநாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது.
  • அறிவியல்சார் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பல்வேறு பகுதிகளின் மீது ஆர்வமுள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இது ஒரு முக்கியமான சந்திப்பாக விளங்குகின்றது.
  • இந்த மாநாட்டின் 106வது பதிப்பானது (முந்தைய அமர்வு) பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள லவ்லி தொழில்சார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் முதலாவது கூட்டமானது 1914 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள ஆசியச் சமூகத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்