TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி லகு வியாபரி மான்-தன் யோஜனா

January 6 , 2020 2051 days 857 0
  • பிரதான் மந்திரி லகு வியாபாரி மான்-தன் யோஜனா என்று அழைக்கப்படுகின்ற வர்த்தகர்கள், கடைக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டமானது 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது 3 கோடி சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்குப் பயன் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரசாங்கமானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிக்குள் 50 லட்சம் சேர்க்கைக்கான இலக்குகளை நிர்ணயித்து இருந்தது.
  • ஆனால் இது தற்போது 25000 பயனாளிகளை மட்டுமே அடைந்துள்ளது
  • அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடும் பொழுது உத்தரப் பிரதேசத்திலிருந்து மட்டும்  (6,765 நபர்களுடன்) அதிகமான பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • மிசோரம் மற்றும் லட்சத் தீவு ஆகிய மாநிலங்களிலிருந்து இதுவரை யாரும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யவில்லை.
  • இத்திட்டத்தினை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது செயல்படுத்தி வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்