2019 ஆம் ஆண்டின் பிரிக்ஸ் உச்சி மாநாடானது 11வது வருடாந்திர பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆகும். இந்த உச்சி மாநாடானது பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அமைந்துள்ள இடமராட்டி அரண்மனையில் நடத்தப் பட்டது.
பிரேசில் தலைநகரான பிரேசிலியா நகரமானது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இரண்டாவது முறையாக நடத்துகின்றது.
இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், "பிரிக்ஸ்: ஒரு புத்தாக்க எதிர் காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி" என்பதாகும்.
இந்தியாவும் பிற பிரிக்ஸ் பொருளாதார நாடுகளும் டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடானது பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஒத்துழைப்பின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.
இந்த மாநாட்டின் போது பரஸ்பர நிதி வழங்கீடுகளுக்கான ஒரு பொதுவான மெய்நிகர் நாணயத்திற்கான யோசனையும் முன்வைக்கப் பட்டது.
இந்தியாவில் புதிய வளர்ச்சி வங்கியின் (New Development Bank - NDB) பிராந்தியக் கிளையை கூடிய விரைவில் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
பேரிடரைத் தாங்கிக் கொள்ளும் உள்கட்டமைப்பிற்கான உலகளாவிய கூட்டணியில் சேர பிரிக்ஸ் நாடுகள் மற்றும் NDB ஆகிய அமைப்புகளுக்கு இந்தியப் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய வளர்ச்சி வங்கி
ஷாங்காய் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தப் புதிய வளர்ச்சி வங்கியானது பிரிக்ஸ் நாடுகளால் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) நிறுவப்பட்ட பன்முகத் தன்மை வாய்ந்த ஒரு வளர்ச்சி வங்கியாகும். இந்த வங்கியானது இதற்கு முன்னர் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி என்று அழைக்கப் பட்டது.
NDBயை ஏற்படுத்துவதற்கான ஒரு யோசனையானது 2012 ஆம் ஆண்டில் புது தில்லியில் நடைபெற்ற 4வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது இந்தியாவினால் முன்மொழியப் பட்டது.