இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவானது தெலுங்கானாவின் பெத்தப் பள்ளி மாவட்டத்தில் உள்ள குண்டாரம் காப்புக் காடுகள் என்ற பகுதியில் பதினொரு கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளது.
இது கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தைச் சேர்ந்தது.
இந்தக் கல்வெட்டுகளானது தக்காணத்தின் ஆரம்பகாலக் கலாச்சார மற்றும் அரசியல் நிலப் ரப்பு பற்றிய, குறிப்பாக சாதவாகனர் காலத்தைக் குறிக்கின்ற மிக முக்கியமான தகவல்களை வழங்குகின்றன.
குண்டாரம் குடைவரையிலிருந்து இரண்டு கல்வெட்டுகள் அவற்றின் மிக வரலாற்றுச் சிறப்பிற்காக பெரும் தனித்துவமாகக் கருதப்படுகின்றன.
ஆரம்பகாலப் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டானது, ஹரிதிபுத்ர வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் (சூது வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்) புத்தத் துறவிகளுக்காக ஒரு குகையை உருவாக்கியதாகக் கூறுகிறது.
தென்னிந்தியாவில் ஆரம்பகாலக் கல்வெட்டுகளுடன் இதுபோன்ற சமயச் சின்னங்கள் இருப்பது இதுவே முதல் முறையாகும்.