11 வெப்ப அலை பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் - NHRC வழிகாட்டுதல்கள்
May 5 , 2025 222 days 174 0
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஆனது, பாதிக்கப்படக் கூடிய மக்களை, குறிப்பாக ஏழை சமூகங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதற்கான சில உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு 11 மாநிலங்களிடம் வலியுறுத்தி உள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் வெப்பம் மற்றும் வெயிலின் வெப்பத் தாக்கத்தினால் சுமார் 3,798 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான் ஆகியன இந்த 11 மாநிலங்கள் ஆகும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆனது, தங்குமிடங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குதல், வேலை நேரங்களில் பெரும் மாற்றங்கள் மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு தரப்படுத்தப் பட்ட நடைமுறைகளை கோரியது.