"நடப்பில் செயல்பாட்டில் இல்லாத அரசியல் கட்சிகளை" கண்டறிந்து, அதில் 111 பதிவு செய்யப் பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
"கடுமையான நிதி முறைகேடு" தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மூன்று கட்சிகள் குறித்த ஒரு அறிக்கையினை வருவாய்த் துறைக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமானது, அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கும் அவற்றின் பதிவை நீக்குவதற்குமான ஒரு அதிகாரத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.
பதிவு செய்யப்பட்டக் கட்சிகள், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதித்துவச் சட்டத்தினை மீறும் ஒரு நடவடிக்கையானது கண்டறியப்பட்டு அவற்றிற்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்கப் படுவது இது இரண்டாவது முறையாகும்.