இந்த மாநாடு ஆனது, தொழிலாளர்களை உயிரியல் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முதல் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.
இது பணிச்சூழலில் உயிரியல்சார் ஆபத்துகளை சிறப்பு கவனம் கொண்டு நிவர்த்தி செய்யும் முதல் சர்வதேச செயற்கருவியாகும்.
இந்த உடன்படிக்கை (C192) ஆனது அதன் உறுப்பினர் நாடுகள் ஆனது, தேசிய அளவில் கொள்கைகளை வகுத்து தொழில் துறைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.
அதில் உயிரியல் ஆபத்துகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் பாதுகாப்பு, விபத்துக்கள் மற்றும் பல்வேறு அவசரநிலைகளைச் சமாளிப்பதற்கான தயார்நிலை மற்றும் எதிர் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கவும் இது அழைப்பினை விடுத்தது.
இந்த நிகழ்வின் போது 2006 ஆம் ஆண்டு கடல்சார் தொழிலாளர் உடன்படிக்கைக்கான ஏழு திருத்தங்களும் அங்கீகரிக்கப்பட்டன.
இந்த மாநாட்டில் பாலஸ்தீனமானது உறுப்பினர் அல்லாத ஒரு பார்வையாளர் நாடாக பங்கேற்றது.