ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது பெருங்கடல் மாநாடு (UNOC3 - 2025) ஆனது பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்றது.
இதனைப் பிரான்சு மற்றும் கோஸ்டாரிகா நாடுகள் இணைந்து நடத்தின.
அவை "Our Ocean, Our Future: United for Urgent Action" என்ற தலைப்பிலான ஓர் அரசியல் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.
இந்தப் பிரகடனம் ஆனது "Nice Ocean செயல் திட்டம்" என்றும் அழைக்கப்படும்.
உயர் கடல் ஒப்பந்தத்தின் ஒப்புதலானது 50 நாடுகள் என்ற ஒரு எண்ணிக்கையினை எட்டி உள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் பெருங்கடல் வளங்காப்பு, அறிவியல் மற்றும் நிலையான மீன்பிடித்தலை ஆதரிப்பதற்காக என்று 1 பில்லியன் யூரோ மதிப்பிலான முதலீட்டை அறிவித்தார்.
இந்தோனேசியா மற்றும் உலக வங்கி ஆகியவை அதிகாரப்பூர்வமாகப் பவளப்பாறை நிதித் திரட்டல் பத்திரத்தை அறிமுகப்படுத்தின.
உலகின் மிகப்பெரியதான கடல்சார் பாதுகாக்கப்பட்டப் பகுதியை (MPA) உருவாக்க உள்ளதாக பிரெஞ்சு பாலினீசியா அறிவித்தது.
இது நாட்டின் சுமார் 5 மில்லியன் சதுர கிலோமீட்டர் (1.9 மில்லியன் சதுர மைல்களுக்கு மேல்) பரப்பிலான முழுமையான ஒரு பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தையும் (EEZ) உள்ளடக்கியது.
சிலி மற்றும் கொரியக் குடியரசு ஆகிய இரண்டும் 2028 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்தப் பெருங்கடல்கள் மாநாட்டை நடத்துவதற்கான ஒரு கூட்டு முன்மொழிவை முன்வைத்தன.