TNPSC Thervupettagam

11வது ஆயுர்வேத தினம் 2026

September 25 , 2026 7 days 59 0
  • ஆயுர்வேதம் மற்றும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் அதன் பங்கு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக 11-வது ஆயுர்வேத தினம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Ayurveda for a Healthier Tomorrow என்பதாகும்.
  • ஆயுர்வேத தினம் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டில் அரசாணை மூலம் அரசிதழில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டு கொண்டாட்டமானது நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நடைபெற்ற முதல் ஆயுர்வேத தினமாகும்; முன்னதாக, இது தன்வந்திரி ஜெயந்தி (Dhanteras) அன்று அனுசரிக்கப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறியது.
  • ஆயுஷ் அமைச்சகம் சுகாதார சேவைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி, தரத் தர நிலைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் ஆயுர்வேதத்தை நன்கு மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்