TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில உடல் உறுப்பு தான தினம் 2026

September 25 , 2026 7 days 124 0
  • தமிழ்நாடு மாநில உடல் உறுப்பு தான தினம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று அனுசரிக்கப்பட்டது. மேலும் 2008 ஆம் ஆண்டில் மாநிலத்தின் உடல் உறுப்பு தானத் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்பு தானத்தை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தானம் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக் கௌரவிப்பதும் இந்நாளின் நோக்கமாகும்.
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை, தமிழ்நாட்டில் 312 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மேலும், தானங்கள் மூலம் 1,699 உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் பெறப்பட்டுள்ளன.
  • 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, மாநிலத்தின் உடல் உறுப்பு தானத் திட்டத்தின் மூலம் 2,550 கொடையாளர்களிடமிருந்து 14,845 உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் பெறப்பட்டுள்ளன.
  • மாநிலத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முறைப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது; இத்திட்டம் 2008 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) தரவுகளின்படி, இந்திய மாநிலங்களில் 2025 ஆம் ஆண்டில் இறந்த உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் அதிக எண்ணிக்கையை தமிழ்நாடு பதிவு செய்துள்ளதுடன் மேலும் 2,796 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு மாநில அரசு அரசு மரியாதையும் வழங்கி வருகிறது; 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை 825 கொடையாளர்கள் இத்தகைய மரியாதையைப் பெற்று உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்