மத்திய வேளாண் மற்றும் விவசாயி நலத் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் புது தில்லியில் 11வது தேசிய கிருஷி விக்யான் கேந்திர (Krishi Vigyan Kendra – KVK) மாநாடு - 2020ஐத் தொடங்கி வைத்தார்.
முதலாவது KVK ஆனது 1974 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் சோதனை அடிப்படையில் புதுச்சேரியில் நிறுவப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட KVKக்கள் உள்ளன.