12வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம், “Fostering Parliaments for People-Centric Development” என்ற கருத்துருவின் கீழ் புது தில்லியில் நடைபெற்றது.
இந்த மன்றம் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய 11 பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.
"“Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்ற கருத்துருவின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா வகித்தது.
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் அதன் பாதுகாப்பு சபையில், வளரும் நாடுகளின் (Global South) பிரதிநிதித்துவம் உட்பட உலகளாவிய பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.
இது பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைக் கையாண்டதுடன், ஐநா சபையின் சாசனக் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.
சீனாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டில் இந்த மன்றம் மீண்டும் கூடும்.