இரண்டாவது வருடாந்திர ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பில் தமிழ்நாடு மாநிலத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு ஆனது தமிழ்நாட்டில் 177 தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது என்ற நிலையில் இது 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டதை விட 36 தொகுதிகள் அதிகமாகும்.
தமிழ்நாட்டின் மதிப்பிடப்பட்ட நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,303 ஆக அதிகரித்துள்ளதோடு முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட 1,031 எண்ணிக்கையில் இருந்து இது அதிகரித்துள்ளது.
கிராஸ் ஹில்ஸ் தேசியப் பூங்கா மற்றும் முகூர்த்தி தேசியப் பூங்கா ஆகிய பகுதிகள் நீலகிரி வரையாடுகள் அதிகம் காணப்படும் முதன்மையான பகுதிகளாகும் என்ற நிலையில் கிராஸ் ஹில்ஸ் பகுதியில் 334 நீலகிரி வரையாடுகள் பதிவாகியுள்ளன (2024 ஆம் ஆண்டில் இது 276 ஆக இருந்தது).
முகூர்த்தி பகுதியில் 282 வரையாடுகள் பதிவாகியுள்ளது (கடந்த ஆண்டு இது 203 ஆக இருந்தது).
சுமார் 155 நீலகிரி வரையாடுகள் கேரளாவின் எரவிக்குளம் தேசியப் பூங்காவை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றன.