பாதுகாப்புத் துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான AGNISHODH
August 8 , 2025 7 days 63 0
இந்திய இராணுவம் மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அதிகரிப்பதற்காக AGNISHODH எனும் இந்திய இராணுவ ஆராய்ச்சி மையத்தினை (IARC) தொடங்கியுள்ளன.
நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப உள்ளடக்கத்தின் இராணுவ மாற்றத் திட்டத்தின் கீழான செயல்பாட்டுத் தேவைகளுடன் கல்வி ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மையமானது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சி பூங்காவின் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (AMTDC) மற்றும் பிரவர்தக் தொழில்நுட்பங்கள் அறக்கட்டளையுடன் இதற்கான ஒத்துழைப்பினை மேற்கொள்ளும்.
கூட்டு உற்பத்தி, இணையவெளிப் பாதுகாப்பு, துளிமக் கணினி, கம்பிவடமற்ற தொடர்பு மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகள் போன்ற துறைகளில் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
விக்ஸித் பாரத் 2047 என்ற கொள்கையை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை ஆதரிக்கும் வகையில், AGNISHODH கல்வித் திறனைப் போர்க்களக் கண்டுபிடிப்பாக மாற்றும்.