13வது நகர்ப்புற இயக்க இந்தியக் கருத்தரங்கு 2020 என்ற கருத்தரங்கை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தொடங்கி வைத்தார்.
இந்தக் கருத்தரங்கின் கருத்துரு, “நகர்ப்புற இயக்கத்தில் வளர்ந்து வரும் போக்குகள்” என்பதாகும்.
வருடாந்திர நகர்ப்புற இயக்க இந்தியக் கருத்தரங்கு என்பது இந்தியாவின் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப் படும் ஒரு தலைமைக் கருத்தரங்காகும்.
இந்தக் கருத்தரங்கின் தோற்றமானது 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசின் தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையிலிருந்து மேற்கொள்ளப் பட்டதாகும்.