TNPSC Thervupettagam

1,400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் - நல்லமலை புலிகள் காப்பகம்

June 15 , 2026 7 days 163 0
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள நல்லமலை புலிகள் காப்பகத்தில் 25 பழமையான கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (ASI) கல்வெட்டுப் பிரிவு ஆவணப்படுத்தி நகலெடுத்து உள்ளது.
  • இந்த கல்வெட்டுகள் கி.பி. (CE) 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை, இவை சுமார் 1,400 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியவை.
  • இக்கல்வெட்டுகள் தெலுங்கு, கன்னடம், பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.
  • பதிவுகள் ஆனது சாதவாகனர், கீழைச் சாளுக்கியர், கல்யாணி சாளுக்கியர், பொத்தப்பி சோழர், காகதீயர், ரெட்டி மற்றும் விஜயநகர காலங்களுடன் தொடர்பு உடையவை.
  • கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள அலட்டம் அருகே சுமார் கி.மு. 1500-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பழங்கால பெருங்கற்கால மற்றும் ஆரம்ப கால வரலாற்றுப் பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்