TNPSC Thervupettagam

14473 - உதவி எண்

July 22 , 2025 15 hrs 0 min 55 0
  • 'இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) தினத்தன்று' (ஜூலை 16) கழிவு சேகரிப்பாளர்களுக்கான உதவி எண்ணை (14473) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
  • NAMASTE திட்டம் என்பது எந்தவொரு துப்புரவுப் பணியாளரும் தங்கள் கைகளால் சாக்கடைகள் மற்றும் மலம் மக்குதல் தொட்டிகளை சுத்தம் செய்யும் ஆபத்தான வேலையைச் செய்ய வேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் அரசாங்கத்தின் ஒரு மனிதாபிமான அணுகுமுறையாகும்.
  • இந்தத் திட்டமானது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகங்களால் கூட்டாகத் தொடங்கப்பட்டது.
  • இது தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தினால் (NSKFDC) செயல்படுத்தப்படுகிறது.
  • இது 2023-24 ஆம் நிதியாண்டு முதல் 2025-26 ஆம் நிதியாண்டு வரையில் என மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • இந்தத் திட்டமானது கழிவுநீர் மற்றும் மலம் மக்குதல் தொட்டியைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு (SSWs) பல உரிமைகளை வழங்குகிறது.
  • துப்புரவுப் பணியாளர்களின் விவரங்கள் எண்ணிமச் செயலி மூலம் சேகரிக்கப்பட்டு, PPE கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுக்கான அணுகல், தொழில் பாதுகாப்புப் பயிற்சி, சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் சுகாதாரத் துறையில் வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவை மானிய விலையிலான வசதிகள் மூலம் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்