TNPSC Thervupettagam

15வது நிதி ஆணையத்தின் அறிக்கை

February 8 , 2021 1622 days 810 0
  • 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டிற்கான இந்தியாவின் 15வது நிதி ஆணையத்தின் இறுதி அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • பொதுவாக நிதி ஆணையங்கள் 5 ஆண்டு கால இடைவெளியில் தது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
  • இந்த அறிக்கையானது பின்வரும் 4 தொகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
    • தொகுதி I மற்றும் II – முதன்மை அறிக்கை
    • தொகுதி III – இது மத்திய அரசின் மீது கவனம் செலுத்துகின்றது. இது இடைக்காலச் சவால்கள் மற்றும் செயல்பட வேண்டிய வழிகளுடன் சேர்த்து மிக ஆழமாக மிக முக்கியத் துறைகளை ஆய்வு செய்கின்றது.
    • தொகுதி IV – முழுவதும் மாநிலங்களின் மீது கவனம் செலுத்துகின்றது. இது ஒவ்வொரு மாநிலத்தின் நிதி நிலைமையையும் மிக ஆழமாக ஆய்வு செய்து ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களைக் களைவதற்காக மாநிலங்கள் வாரியாதீர்வுகளைப் பரிந்துரைக்கின்றது.

முக்கியமான பரிந்துரைகள்

  • வளங்களின் கணிப்பு மற்றும் நிலைத் தன்மையைப் பராமரிப்பதற்காக 41% என்ற அளவில் செங்குத்துப் பகிர்வைத் தொடர்ந்து செயல்படுத்துதல்.
  • மாநிலத்தினால் மேற்கொள்ளப்படும் சுகாதாரத்தின் மீதான செலவினமானது 2022 ஆம் ஆண்டில் அதன் நிதிநிலை அறிக்கையில் 8%ற்கும் மேல் அதிகரிக்கப்பட வேண்டும்.
  • மின்துறைச் சீர்திருத்தங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து மாநிலங்களும் கூடுதலாக கடன் பெறும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்