TNPSC Thervupettagam

15 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு உயர்வு

August 29 , 2026 20 days 120 0
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 30.7 பில்லியன் டாலர் மொத்த அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்துள்ளது, இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த அளவாகும்.
  • நிகர அந்நிய நேரடி முதலீடானது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 7.8 பில்லியன் டாலர்களை எட்டியது, இது 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிக அதிக அளவாகும்.
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரவு 9.3 பில்லியன் டாலர்களாகவும், மொத்த வெளியேற்றம் 7.9 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது, இதன் விளைவாக நிகர அந்நிய நேரடி முதலீடு 1.3 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டு வரவில் சுமார் 74% பங்கைக் கொண்டுள்ளன.
  • உற்பத்தித் துறை அதிக அளவிலான முதலீடுகளைப் பெற்றது, அதைத் தொடர்ந்து மின்சார உற்பத்தி, கணினி சேவைகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் உள்ளன.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான மொத்த அந்நிய நேரடி முதலீடு முந்தைய காலாண்டை விட கிட்டத்தட்ட 46% அதிகமாகவும், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டை விட சுமார் 15% அதிகமாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்