TNPSC Thervupettagam

150 ஆண்டு கால இந்திய அறிவியல் தகைசால் தன்மை

May 31 , 2026 15 days 91 0
  • இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகமானது (IACS) தனது 150-வது ஆண்டு விழாவை 2026-ஆம் ஆண்டு கொண்டாடியது.
  • 1876-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட IACS ஆனது அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்தியர்களால் நிறுவப்பட்ட ஆசியாவின் முதல் ஆராய்ச்சி நிறுவனமாக கருதப்படுகிறது.
  • இந்தியாவின் முதல் உருவமற்ற சிலிக்கான் சூரிய மின்கலத்தை உருவாக்குவதற்காக IACS-இல் பிளாஸ்மா மேம்படுத்தப்பட்ட ரசாயன நீராவி படிவு (PECVD) அமைப்பை அரசு திறந்து வைத்தது.
  • ஜெகதீஷ் சந்திர போஸ், மேக்நாத் சாஹா, சத்யேந்திர நாத் போஸ் மற்றும் சி.வி. ராமன் போன்ற தலைசிறந்த அறிவியலாளர்கள் IACS உடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
  • சி.வி. ராமன் IACS-இல் தான் 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார் என்பதோடு இது 1930-ஆம் ஆண்டில் அறிவியலுக்கான இந்தியாவின் முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்