ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சாஞ்சு எல்லைச் சாவடிக்கு சென்றிருந்த போது, மத்திய உள்துறை அமைச்சர் நான்கு பரிமாண கட்ட எல்லையோரப் பாதுகாப்பு மாதிரியை முன்மொழிந்தார்.
இது இந்தியாவின் சர்வதேச எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு புதிய ஒருங்கிணைந்த எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பாகும்.
இந்த மாதிரி எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), ராணுவம், மாவட்ட நிர்வாகம், இணையக் கண்காணிப்புப் பிரிவுகள் மற்றும் எல்லையோர மக்களை ஒரே ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் கொண்டுவருகிறது.
ஊடுருவல், கடத்தல், ஆளில்லா விமான ஊடுருவல்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பல அடுக்குப் பாதுகாப்பு மூலம் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இணையக் கண்காணிப்பு, ஆளில்லா விமான கண்காணிப்பு, நிகழ்நேர உளவுத்துறை பகிர்வு மற்றும் மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் போன்ற தொழில் நுட்பங்களை இந்தக் கட்டமைப்பு பயன்படுத்துகிறது.