16-ஆம் நூற்றாண்டு தெலுங்கு கல்வெட்டு - ஆந்திரப் பிரதேசம்
May 16 , 2026 132 days 170 0
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ புக்கா ராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெலுங்கு கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.
தாடிபத்திரியில் உள்ள இக்கோவிலின் வடக்குச் சுவரில் இக்கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டது.
வரலாற்று ஆய்வாளர் மைனா சுவாமி இக்கல்வெட்டை கி.பி. 1574 அல்லது கி.பி. 1634 காலத்தைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
உதயகிரி சீமையில் உள்ள மகிமலூரைச் சேர்ந்த சத்ரம் செருவுப்பள்ளி கலையாவின் மகன் பசவப்பா வழங்கிய காணிக்கையை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.
இந்தச் செதுக்கலில் பசவப்பாவும் அவரது மனைவியும் சிவலிங்கத்திற்கு அருகில் பக்தி நிலையில் நிற்பதும் காட்டப்பட்டுள்ளது.
தாடிபத்திரி அந்த காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் பென்னாபாடி சீமையின் ஒரு பகுதியாக இருந்தது.