TNPSC Thervupettagam

16-ஆம் நூற்றாண்டு தெலுங்கு கல்வெட்டு - ஆந்திரப் பிரதேசம்

May 16 , 2026 16 days 42 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ புக்கா ராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெலுங்கு கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.
  • தாடிபத்திரியில் உள்ள இக்கோவிலின் வடக்குச் சுவரில் இக்கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டது.
  • வரலாற்று ஆய்வாளர் மைனா சுவாமி இக்கல்வெட்டை கி.பி. 1574 அல்லது கி.பி. 1634 காலத்தைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • உதயகிரி சீமையில் உள்ள மகிமலூரைச் சேர்ந்த சத்ரம் செருவுப்பள்ளி கலையாவின் மகன் பசவப்பா வழங்கிய காணிக்கையை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.
  • இந்தச் செதுக்கலில் பசவப்பாவும் அவரது மனைவியும் சிவலிங்கத்திற்கு அருகில் பக்தி நிலையில் நிற்பதும் காட்டப்பட்டுள்ளது.
  • தாடிபத்திரி அந்த காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் பென்னாபாடி சீமையின் ஒரு பகுதியாக இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்