TNPSC Thervupettagam

16-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் மாநாடு 2026

July 27 , 2026 15 hrs 0 min 25 0
  • இந்தியாவின் 2026 ஆம் ஆண்டு பிரிக்ஸ் தலைமையின் கீழ் 16-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் மாநாடு சண்டிகரில் முடிவடைந்ததுடன் இதில் 16-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • பொது சுகாதார ஒத்துழைப்பு, சுகாதார சமத்துவம், நெகிழ்வுத்தன்மை கொண்ட சுகாதார அமைப்புகள் மற்றும் உலகளாவிய சுகாதாரச் சவால்கள் ஆகியவற்றில் இந்த கூட்டம் கவனம் செலுத்தியது.
  • ஆராய்ச்சி மற்றும் அறிவுப் பகிர்வுக்காக பாரம்பரிய, முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான (TCIM) பிரிக்ஸ் நிபுணர் பணிக்குழுவை நிறுவுவதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஆதரவளித்தன.
  • இக்கூட்டம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான பிரிக்ஸ் திட்டத்தைத் தொடங்கி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மேம்பாட்டு வழிகாட்டுதலுக்கு (2026–2029) ஒப்புதல் அளித்தது.
  • தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை (NIMHANS) ஒருங்கிணைப்பு மையமாகக் கொண்ட மனநலத்திற்கான பிரிக்ஸ் சிறப்பு மையங்களின் கூட்டமைப்பை இந்தியா அறிவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்