நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பிற்கான செயற்கை நுண்ணறிவில் (AI) கவனம் செலுத்தி, 2026 ஆம் ஆண்டின் பிரிக்ஸ் அறிவியல் கழகங்களின் மன்றம் ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) நிறைவடைந்தது.
இம்மன்றத்தை இந்திய தேசிய அறிவியல் கழகம் (INSA) ஏற்பாடு செய்தது.
இதன் கருத்துரு "நிலையான மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துதல் மற்றும் உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்" என்பதாகும்.
உலகளாவிய சவால்களுக்கான நெறிமுறை, உள்ளடக்கிய மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட AI அணுகுமுறைகள் குறித்து இம்மன்றம் விவாதித்தது.
மேம்பட்ட உற்பத்தி, சுகாதாரம், பருவநிலை மாற்றம், விவசாயம் மற்றும் பேரிடர் கணிப்பு மற்றும் மேலாண்மை ஆகிய ஐந்து AI முன்னுரிமைப் பகுதிகளை இது அடையாளம் கண்டுள்ளது.