TNPSC Thervupettagam

3-வது பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாடு

July 27 , 2026 15 hrs 0 min 24 0
  • புது தில்லியில் பேரிடர் அபாயக் குறைப்பு (DRR) குறித்த 3-வது பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டை இந்தியா தொகுத்து வழங்கியது, இதில் உறுப்பு நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை ஏற்றுக் கொண்டன.
  • இந்தியாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமையின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
  • பிரிக்ஸ் பேரிடர் அபாயக் குறைப்புப் பணித் திட்டத்தை (2025–2028) செயல் படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தக் கூட்டு அறிக்கை மீண்டும் உறுதிப் படுத்தியது.
  • முன் எச்சரிக்கை அமைப்புகள், நெகிழ்வுத்தன்மை கொண்ட உள்கட்டமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இயற்கை சார்ந்த தீர்வுகள் மற்றும் சமூக மீள்திறன் உள்ளிட்ட ஐந்து முன்னுரிமைப் பகுதிகளை இந்தியா எடுத்துரைத்தது.
  • பிரிக்ஸ் நாடுகளில் கொள்கை உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்காக பேரிடர் அபாயக் குறைப்பு குறித்த ஆறு முதன்மை அறிவுசார் தயாரிப்புகள் வெளியிடப்பட்டன.
  • பேரிடர் மீள்திறனை மேம்படுத்துவதற்காக, பருவநிலைக்கேற்ற உள்கட்டமைப்பு, அறிவுப் பகிர்வு, கூட்டுத் திட்டங்கள் மற்றும் உருவகப்படுத்துதல் பயிற்சிகள் ஆகியவற்றிலும் இக்கூட்டம் கவனம் செலுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்